மொழிபெயர்ப்பு குறித்து ஜி.குப்புசாமி 

“இக்கதைகளை மொழிபெயர்க்கையில் சந்தித்த சிக்கல்களும் சவால்களும் பலதரப்பட்டவை. எவ்வளவு நுட்பமாக மொழிபெயர்க்கப்பட்டாலும் அது பரிபூரணத்தை எட்டவே முடியாதென்பதை மொழிபெயர்ப்பாளன் உணர்ந்தே இருக்கிறான். ஒவ்வொரு மொழியும் அது விளைந்த மண்ணையும், புழங்கும் கலாச்சாரத்தையும் சார்ந்தே உருக்கொண்டிருக்கிறது. வேறோர் அந்நியமொழியில் மூலப்படைப்பை அதன் அடிவேரோடு பெயர்த்து உருவாக்கம் செய்திட சாத்தியமேயில்லை. மொழிபெயர்க்கப்படும் மொழிசார்ந்த கலாசாரப் பின்னணியும், மொழி இலக்கணம் சார்ந்த நுட்பங்களும் மூலப்படைப்பின் படைப்பெழுச்சியையும் உணர்தளத்து எதிர்வினைகளையும் நூறு சதவீதம் தூய்மையாக மொழிபெயர்ப்பில் கொண்டுவர இடமளிப்பதில்லை. மொழிபெயர்ப்பாளனுக்கு அனுமதிக்கப்ப்டிருக்கும் மிகக்குறுகிய வெளியில் Catching the letter by the spirit of it என்பதே மொழிபெயர்ப்பாளனின் சூத்திரமாக இருக்கிறது. மொழி பெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்பாளன் காணாமல் போவதும் அவனது படைப்பாக்கமும் ஒரு சேர நிகழும் இரட்டைச் செயற்பாங்கு எனது மொழிபெயர்ப்புகளில் எனது சொந்த பாணியின் சிறு துகள் கூட இருக்ககூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். எனது இன்மையின் மூலம் மட்டுமே நான் அங்கீகரிக்கப்பட விரும்புகிறேன் என்ற தொமினிக் விதால்யோவின் கூற்றையே நானும் வழிமொழிகிறேன்.

மூலப்படைப்புகளின் பாத்திரங்களின் உள்நோக்கிய பார்வைகளுக்குள் மொழிபெயர்ப்பாளனின் மொழி ஊன்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. மூலப்படைப்பைப் போலவே ஒவ்வொரு வரிகளுக்கிடையிலும் தனது கூர்மையையும் எடையையும் மாற்றிகொண்டேயிருக்கும் உணர்சிகளுக்கேற்றவாறு அம்மொழியும் உருமாற வேண்டும். இலக்கியப்பிரதி தனது மேற்பரப்புப் பிரதியுடன் உட்பிரதி ஒன்றையும் கொண்டிருக்கிறது. மொழிபெயர்க்கையில் இந்த உட்ப்ரதியைக் கொண்டுவருவதுதான் சவால். இன்டஹ்ச் சவாலில் எந்தளவுக்கு நான் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதை இக்கதைகளோடு குறிப்பிடப்பட்டுள்ள மூலப்படைப்புகளையும் சேர்த்துப் படித்து என் மொழிபெயர்ப்பை எந்த வாசகனாவது மதிப்பிடுவானென்றால் அவனுக்காக காத்திருக்கிறேன்”

– ஜி.குப்புசாமி – இன்றைய அயல் எழுத்திற்கு சில பரிந்துரைகள் முன்னுரையிலிருந்து

– நாளை வெகுதூரம் (சமகால உலகச் சிறுகதைகள்) / உயிர்மை பதிப்பகம் / முதல் பதிப்பு: டிசம்பர் 2007

Advertisements

Milan Kundera on Friendship

“Friendship, to me, was proof of the existence of something stronger than ideology, than religion, than the nation, In Dumas’ book, the four friends often find themselves on opposite sides and thus required to fight against one another. But that doesn’t affect their friendship. They still go on helping one another, secretly, cunningly, without giving a damn for the truths of their respective camps. They put their friendship above the truth, or orders from superiors, above the king, above the queen, above everything”

 

°

“Dumas wrote the story of the musketeers two hundred years after their time. Was he already feeling nostalgia then for the lost universe of friendship? Or is the disappearance of friendship a more recent phenomenon?”

 

°

“How is friendship born? Certainly as an alliance against adversity, an alliance without which man would be helpless before his enemies. Maybe there’s no longer a vital need for such an alliance.”

“There will always be enemies”

“Yes. But they are invisible and anonymous. Bureaucracies, laws. What can a friend do for you when they decide to build an airport outside your windows, or when they fire you? If anyone helps you, again it’s somebody anonymous, invisible, a social-service outfit, a consumer watchdog organization, a law firm. The friendship can no longer be proven by some exploit. The occasion no longer lends itself to searching out our wounded friend on the battlefield, or unsheathing your sabre to defend him against bandits. We go through our lives without great perils, but also without friendship”

°

1milan_kundera1
Milan Kundera

Milan Kundera (Identity)

Translated from the french by Linda Asher

faber and faber