அசோகமித்திரன் குறித்து சாரு

சாருவின் இந்த உரை படிப்பதற்கு மேம்போக்கனதாக சிலருக்குத் தெரியலாம். ஆனால் மிக நுட்பமாக அசோகமித்ரனின் படைப்புலகம் குறித்து இதில் சாரு அணுகியிருக்கிறார் என்பதே என் துணிபு. இதற்குமேல் ஒரு வாசகன் எழுத்தாளனைக் கொண்டாட முடியாது.

  1. உங்கள் வாழ்கையைப் பற்றி விரிவாக எழுதச்சொன்னால் எத்தனை பக்கங்கள் எழுதுவீர்கள்?  500 முதல் 1000 பக்கங்கள் எழுதுவீர்களா?
  2. சரி உங்கள் வாழ்கையை புகைப்படங்களாகத் தொகுக்கச் சொன்னால் எத்தனை புகைப்படங்கள் முடிவில் அந்தத் தொகுப்பினில் இடம்பெறும்? நீங்கள் 60 வயது நபர் என்றால் வருடத்திற்கு ஒன்றாக குறைந்தது 50 முதல்  60 புகைப்படங்கள் இடம்பெறுமா?
  3. ஒரு எழுத்தாளனின், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அனைத்து வாசகராலும் பெரிதும் மதிக்கக்கூடிய ஒரு எழுத்தாளனின் மொத்தப் புனைவுலகம் குறித்தும் எழுதினால் எத்தனை பக்கங்கள் வரும், அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்களுக்கு 500 பக்கங்களாவது வருமல்லவா?

உங்களுக்கு வார்த்தைகள் போதாத நிலை கூட ஏற்படலாம். ஜெயமோகன் அமி குறித்து எத்தனையோ பக்கங்கள் எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறார். சாரு மூன்று கட்டுரைகளாக ‘பழுப்பு நிற பக்கங்களில்’ எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறார். நான் அமி குறித்து எழுதினாலும் ஒரு 5000 வார்த்தையாவது எழுதுவேன். (எனக்கு அவர் படைப்புகளில் மிகவும் பிடித்தது ‘ஒற்றன்’ மற்றும் ‘இன்று’. அதில் இன்று மிக முக்கியமான படைப்பாகப்படுகிறது. இந்திய தேசம் சுதந்திரத்திற்குப் பிறகு எதிர்கொண்ட பிரச்சினைகளில் முதன்மையானதும் பத்திரிகைச் சுதந்திரம் போன்றவை கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டதும் நிகழ்ந்த காலம். நாட்டின் சமூக பொருளாதார கலாசார கலை படைப்புகளில் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்திய காலகட்டம். அந்த நிகழ்வானது ஒரு எழுத்தாளனின் ஆன்மாவை எந்தளவு குலைத்திருக்கும்? அதற்கு அவனது எதிர்வினை என்ன? அந்தச் சூழலை அவன் எப்படி தனது படைப்பில் பிரதிபலித்திருக்கிறான் என்பதை ‘இன்று’ வாசித்து உணர்ந்து கொள்ளலாம். அவசரநிலை காலகட்டத்திற்கான ஒரு இலக்கிய ஆவணம் அமி எழுதிய ‘இன்று’. இப்படிதான் அதனைப் பார்கிறேன். ஒற்றன் குறித்த எனது வாசிப்பை இங்கு ஏற்கனவே எழுதியிருக்கிறேன். 2. இன்று எழுதும் எத்தனைப் படைப்புகள் சமகால வாழ்வை, அரசியல் கொதிநிலையை, நவீன கலசாரத்தினைப் பதிவு செய்கிறது என்று நமக்கு நாமே ஒரு கேள்வியினை கேட்டுக்கொள்ளலாம். சென்னை வெள்ளம், ஐடி துறை, தோல்வியுறும் மனிதம், ஆண் பெண் உறவு குறித்தெல்லாம் நுட்பமான படைப்புகள் ஏதேனும் வெளிவந்திருக்கிறதா? ஆனால் அமி மிக முக்கியமான ஒரு அரசியல் தோல்வியை பதிவு செய்திருக்கிறார். அதுவும் நேரடியாக அல்ல. படைப்பின் ஆழத்தில் தான் அது இருக்கிறது. முரகாமியின் after the quake stories போல)

மேற்குறிப்பிட்ட மூன்று கேள்விகளுக்கு உங்கள் பதில் என்னவென்று தெரியவில்லை. என் பதில் இதுதான் ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்கையைக் குறிப்பிட ஒன்று அல்லது இரண்டு சொற்கள் போதும். ஒருவனின் வாழ்கையை எடுத்துகூற ஒரு புகைப்படம் போதும். எனது திருமணத்திற்கு அதனை சிறப்பாக வெளிப்படுத்தும்மி  ‘ஒரே ஒரு புகைப்படம்’ எடுத்துத் தந்தாலே போதும் என்று எனது புகைப்பட நண்பர்களிடம் ஏற்கனவே கூறிவிட்டேன்.

அவ்வகையில் அசோகமித்ரனின் ஒட்டுமொத்த படைப்புலகினையும் சாரு இரண்டே சொற்களில் அடக்குவது இதுவரை நான் அமி குறித்து வாசித்ததில் எங்கும் கிடைக்காதது. இது சாருவின் வாசிப்பு.  இதுதான் சாருவின் பலம். அவரால் பக்கம் பக்கமாக ஆய்வுக்கட்டுரை எழுத முடியாமல் போகலாம். அனால் ஒரு திரைப்படத்திலிருந்து ஒரு வார்த்தையை கண்டடைகிறார். உதாரணத்திற்கு புதுப்பேட்டை – தமிழின் முதல் ‘subaltern cinema’ என்கிறார், இது போதுமல்லவா! சினிமாவினைக் குறித்து எழுதும் தொடருக்கு ‘ஒளியின் பெருஞ்சலனம்’ என்றும் பழைய இலக்கியவாதிகள் குறித்து எழுதும் தொடருக்கு ‘பழுப்பு நிறப்பக்கங்கள்’ என்றும் பெயர் சூடுகிறார். இதுதான் ஒரு அனுபவத்தில் ஒருவர் கண்டடைவது. Abstract ஆக உங்களுக்கு ஒன்றைச் சொல்லத் தெரிந்தாலே போதும். நீங்கள் ஆழாமாக புரிந்துகொள்ளாத எந்த ஒன்றையுமே உங்களால் abstract ஆகச் சொல்ல முடியாது. மேம்போக்காக விக்கிபீடியாவை பார்த்து அடித்துவிடும் கட்டுரையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படி சாரு அசோகமித்திரன் குறித்து இரண்டு சொற்களை கண்டடைகிறார். ஒன்று Angst, மற்றொன்று Absurdity. இதுதான் அசோகமித்திரன். இதனை அவரது பரந்துபட்ட வாசிப்பனுபவம் மேலும் அமி-யை முழுமையாக வாசித்தல் ஆகியவற்றிலிருந்து சாரு கண்டடைகிறார்.

என் பேராசிரியர் ஒருவர் இருக்கிறார். படம் திரையிடப்பட்டு முடிந்தவுடன் மாணவர்களிடம் ஒரு வார்த்தையில் அந்தத் திரைப்படத்தை விளக்கச் சொல்வார். (பின்பு அவரே அதே படத்திற்கு 1500 வர்திகளில் கட்டுரை எழுதி வாங்குவது வேறு கதை) ஒருவர் கூறிய வார்த்தையை மற்றவர் கூறக்கூடாது. ஒருவர் சொல்லும் அந்த வார்த்தையானது முழுப்படைப்பினையும் வெளிப்படுத்தும், உணர்த்தும், விமர்சிக்கும் ஒரு வார்த்தையாக இருத்தல் அவசியம். ஒரு படைப்பினையும் முழுமையாக புரிந்துகொண்டவனுக்கே அதனை ஒரே வார்த்தையில் அடக்க முடியும் என்பது அவரது துணிபு. அதே school of thought தான் என்னுடையதும். ஆய்வுக்கட்டுரைகளை நீங்கள் சர்வதேச ஆய்வு  இதழ்களுக்கு அனுப்பும்பொழுது அவர்கள் முதலில் கேட்பது abstractனைத்தான். அதிலேயே நமது லக்ஷணம் தெரிந்துவிடும்.

இப்படி சில காரணங்களுக்காக இந்த உரை எனக்குப் பிடித்த கட்டுரையாகிறது. சமீபத்தில் அவர் ஆற்றிய சிறப்பான உரை இதுவாகத்தானிருக்கும். இதிலும் flow கடைசிவரை இல்லை என நொந்துகொள்கிறார். அவர எதைக்குறித்து பேசுவதற்கு அழைக்கப்படுகிறாரோ அது குறித்து பேசாமல் தனது சொந்த அனுபவத்தினை தான் பேசுவார். அதில் சுவாரசியத்திற்கு குறைவிருக்காது தான். அனால் எதற்கு பேச அழைக்கப்பட்டாரோ அதுகுறித்து மட்டும் பேசியது என் அனுபவத்தில் இந்த உரைதான்.

அசோகமித்திரனின் தத்துவம் – சாரு நிவேதிதா உரையின் எழுத்து வடிவம்

 


 

அசோகமித்ரனுக்கு அஞ்சலி கட்டுரை எழுதாமல் இருந்ததோ அல்லது facebookஇல் feeling sad என்று எழுதாமல் விட்டதாலோ எனக்கு அமி மீது மதிப்பில்லை என்று அர்த்தமில்லை. ஒரு எழுத்தாளன் என்றுமே இறப்பதில்லை என்ற அரதப்பழைய அதே template பதத்தை நானும் பயன்படுத்திக்கொள்கிறேன்.  (டீசர்: ஆசிரியனின் மரணம் என ரோலான் பார்த் சொன்னது வேறு அர்த்தத்தில். அதுபற்றி நான் கற்கும் கோட்பாடுகள் குறித்து எழுதப்போகும் தொடரில் விரிவாக எழுத முயல்வேன்) அமி படைப்புகளில் அவர் கட்டுரை தொகுப்புகள் குறித்து ஒரு சில வார்த்தைகள் கூறி அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

ashokamitran-2x

அசோகமித்ரனின் இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கின்றன. அவை இரண்டுமே மிக முக்கியமான ஆவணங்கள். ஏறத்தாழ அவர் வாழ்ந்த காலகட்டத்தின் சமூகப் பொருளாதார கலாசார நிகழ்வுகளைப் பதிவு செய்தவை. அதில் அந்நாளைய எழுத்தாளனின் சிந்தனைப்போக்கு, சமூக நிகழ்வுகளுக்கு அவனது ஆன்மாவின் எதிர்வினை ஆகியவற்றைக் காணலாம். மேலும் அவருக்குப் பிடித்த புத்தகங்கள், எழுத்தாளர்கள், சினிமா என பலவற்றைக் குறித்தும் தனது பார்வையினை எழுதியிருக்கிறார் அமி. பொலான்ஸ்கி இந்தியாவிற்கு வந்து காறி உமிழ்ந்தது குறித்த கட்டுரை முக்கியமானது. இன்னும் நாம் அந்த நிலையிலேயே தான் இருக்கிறோம்.   புனைவுகள் வாசிப்பதோடு அமியை மறந்துவிடாமல் அவரது அபுனைவுகளையும் வாசிப்பதே நம் காலத்தின் சிறந்த எழுத்தாளனுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்.

அசோகமித்திரனுக்கு எனது அஞ்சலிகள் _/\_ 🙂

Charu Nivedita about Asokamitran in Scroll.in

Asokamitran Interview to Hindu

 

 

Advertisements