இரண்டு டிவி சீரியல்கள் பற்றிய குறிப்பு

சரவணா கணேஷ் பரிந்துரை செய்யும் படங்களை / புத்தகங்களை / டிவி சீரியல்களை நம்பிப் பார்க்கலாம். அவர் ‘சிறப்பான’வற்றை மட்டும் தேடுவதில்லை. Unique ஆனவற்றையும் படு சுவாரசியமானவற்றைத் தேடக்கூடியவர். அப்படி அவர் சமீபத்தில் அறிமுகப்படுத்திய இரண்டு டிவி சீரியல்கள் மிக அபாரமான உள்ளடக்கதினைக் கொண்டிருக்கின்றன. இரண்டிற்குமுள்ள ஒற்றுமை என்னவெனில் இரண்டுமே பிரபலமான நாவல்களை அடிபப்டையாகக் கொண்டவை.

  1. The Handmaiden’s Tale (Hulu)
  2. American Gods. (Starz)

Margaret Atwood எழுதிய The Handmaid’s Tale நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த தொலைகாட்சி சீரியல் அற்புதமான அனுபவம் தருகிறது. இந்த தொடரை மற்றுமொரு Dystopian புனைவு என்று என்னால் உதாசீனம் செய்யமுடியவில்லை. சொல்லப்போனால் இப்படியொரு Dystopia உலகத்தை இதுவரை நான் எங்கும் கண்டதோ வாசித்ததோ இல்லை. வலியினைப் பதிவு செய்கிறது என்று சொல்ல முடியவில்லை. ஏனெனில் கதைசொல்லலில் ஒரு கொண்டாட்டத்தன்மை இருந்துகொண்டே இருக்கிறது. வலி மிகுந்த ஒரு காட்சி மனதிற்குத் தொந்தரவு தந்துகொண்டிருக்கையில் தடாலென ராக் இசை அலறுகிறது. முக்கியமான சீரியல்.

thehandmaidstale1-embed

அடுத்து American Gods. Unique, Funny, Brutal and Exciting. ரத்தம் தெறிக்கும் காட்சிகளும் உண்டு. GoT போன்றவைகளைவிட இவை மனதிற்கு மிகவும் பிடித்திருக்கின்றன.  வரும் காலங்களில் இதனைத் தொடர்ந்து காணவிருக்கிறேன்.

american-gods-release-date

More Readings:

  1. American Gods Trailer
  2. The Handmaiden’s Tale Trailer
  3. https://www.facebook.com/photo.php?fbid=10202952752816519&set=a.2696467307614.75563.1734567300&type=3&theater 
  4. https://www.facebook.com/photo.php?fbid=10202909738821196&set=a.2696467307614.75563.1734567300&type=3&theater
Advertisements